ஒருங்கிணைந்த சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 08, 2026 05:40 PM
ஊட்டி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு, மூன்று பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலெக்டர் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்த பணியிடத்திற்கு, 18,800 ரூபாய் மாத தொகுப்பூதியம் வழங்கப்படும். சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது சட்டம் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்தவராகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், ஒரு வருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு பல்நோக்கு பணியாளர்கள் பணியிடத்திற்கு, 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். அலுவலகத்தில் பல்நோக்கு பணியாளராக பணிபுரிந்த அனுபவம் சான்றிதழ் பெற்று இருப்பது அவசியம்.
ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் அழிக்க வேண்டும். கடைசி நாள், 23ம் தேதி மாலை, 5:30 மணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.
