/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட காஜி பிரதிநிதி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மாவட்ட காஜி பிரதிநிதி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
மாவட்ட காஜி பிரதிநிதி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
மாவட்ட காஜி பிரதிநிதி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : அக் 07, 2024 12:22 AM
கோத்தகிரி, - இஸ்லாமிய மக்களின் மாவட்ட காஜி பிரதிநிதி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி பதவிக்காலம், 2023, செப்., 13 அன்று, மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், புதிய காஜி நியமனம் செய்வதற்கு, மாவட்ட அளவிலான தேர்வு குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட தேர்வு குழுவில், மாவட்ட கலெக்டர் தலைவராகவும், தகுதி வாய்ந்த உலமாக்கள், முஸ்லீம் குடிமக்களுக்கு சமூக சேவை மற்றும் சமுதாயத்தை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்து நற்பெயர் பெற்ற, இரண்டு இஸ்லாமிய முக்கியஸ்தர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய, சுய விபர குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகிய விபரங்களுடன், வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் பிங்கர் போஸ்ட் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.