/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிர் உரிமை தொகைக்காக குவிந்த விண்ணப்பங்கள்
/
மகளிர் உரிமை தொகைக்காக குவிந்த விண்ணப்பங்கள்
ADDED : ஜூலை 17, 2025 09:26 PM

கோத்தகிரி; கோத்தகிரியில் நடந்த முகாமில், மகளிர் உரிமை தொகைக்கான மனுக்கள் குவிந்தன.
கோத்தகிரி காந்தி மைதானம் புயல் நிவாரண கூட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்புமுகாம் நடந்தது. கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 4, 9 மற்றும் 11 வார்டுகளை சேர்ந்த மக்கள் முகாமில் பங்கேற்றனர்.
அதில், 'ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, முதியோர் உதவித்தொகை, மருத்துவ காப்பீடு திட்டம்,' உட்பட, பல்வேறு தேவைகளுக்காக, பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
குறிப்பாக, மகளிர் உரிமை தொகை கிடைக்காத, 500க்கும் மேற்பட்டோர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பித்தனர்.
மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகள் மற்றும் மனுக்களின் விபரங்களை, கலெக்டர் லட்சுமி பவ்யா நேரில் ஆய்வு செய்தார்.
முகாம் துவங்கியது முதல் இறுதிவரை, டோக்கன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.