/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்களுக்கு சின்னம்மை தொற்று? பாதிப்பு இருப்பின் வீட்டில் இருக்கலாம்

ADDED : ஜூலை 22, 2025 09:34 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு, சின்னம்மை தொற்றுக்கான அறிகுறி இருந்துள்ளது.
பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும், பரிசோதனை நடத்தி, தொற்று பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்த பிறகு, பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளது.
'தொற்று பாதிக்காத, மாணவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும்,' என, பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவாமல் தடுக்கும் வகை யில், பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள வேறு ஒரு தனியார் பள்ளியிலும், மூன்று மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
பெற்றோர் கூறுகையில், ' சின்னம்மை தொற்று குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் கட்டாயமாக 'மாஸ்க்' அணிவதை உறுதி செய்து, சுகாதார துறை சார்பில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.