/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரிகவுடரின் 131 வது பிறந்த நாள் நிகழ்ச்சி
/
ஆரிகவுடரின் 131 வது பிறந்த நாள் நிகழ்ச்சி
ADDED : டிச 04, 2024 09:51 PM

ஊட்டி; ஊட்டியில் ராவ்பகதுார் ஆரிகவுடரின், 131 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள ஆரிகவுடரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, 131 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன் தலைமை வகித்தார்.
என்.சி.எம்.எஸ். கூட்டுறவு துணைப் பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
ஆரி கவுடரின் உறவினர் ஜெயபிரகாஷ், பேத்தி தாரா, முன்னாள் என்.சி.எம்.எஸ். தலைவர் கண்ணபிரான் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று ஆரி கவுடரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
என்.சி.எம்.எஸ்., வளாகத்தை, 'ஆரி கவுடர் வளாகம்' என்று பெயர் மாற்றம் செய்ததற்காக, மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு, விழா குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.