UPDATED : ஜூன் 14, 2026 03:13 PM
ADDED : ஜூன் 14, 2026 03:10 PM

குன்னூர்:உலக ரத்த தானத்தை முன்னிட்டு எம்.ஆர். .சி., ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.
குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம். ஆர். சி.,) ராணுவ வீரர்கள் பல்வேறு வீரதீர செயல்களில் மட்டுமின்றி, மீட்பு பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உட்பட பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, நேற்று எம்.ஆர்.சி பிலிப்போஸ் ஜிம்னாசியம் அரங்கில், இந்திய தேயிலை வாரியம் மற்றும் எம்.ஆர்.சி., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை, கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ண னேந்து தாஸ் துவக்கி வைத்தார். இதில், ராணுவ வீரர்கள், தேயிலை வாரியத்தினர் உட்பட 41 பேர் ரத்த தானம் செய்தனர்.
ரத்ததானம் செய்வதன் வாயிலாக பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதன் கருப்பொருளாக கொண்டு அனைவரும் ரத்ததானம் செய்ய உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
