தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றில் விழுந்த மரம்: ராணுவ ஸ்டேஷன் கட்டடம் சேதம்

காற்றில் விழுந்த மரம்: ராணுவ ஸ்டேஷன் கட்டடம் சேதம்

காற்றில் விழுந்த மரம்: ராணுவ ஸ்டேஷன் கட்டடம் சேதம்


ADDED : செப் 24, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் பலத்த காற்று வீசியதில், மரம் விழுந்ததில் ராணுவ ஸ்டேஷன் ஹெட்குவாட்டர் கட்டடம் சேதமடைந்தது.

குன்னுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. அதில், ராணுவ மருத்துவமனை அருகே நின்றிருந்த, 70 அடி உயர யூகலிப்டஸ் மரம் நேற்று காலை திடீரென வேரோடு சாய்ந்தது.

அந்த மரம் அருகிலிருந்த ராணுவ நிலைய தலைமை அலுவலக கட்டடம், மின்கம்பிகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது விழுந்தது. அதில், கட்டடத்தின் ஒரு பகுதி லேசாக இடிந்து சேதமடைந்ததுடன், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்த நேரத்தில் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ராணுவ நிலைய தலைமை அலுவலக ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரத்தை நவீன இயந்திரத்தில் அறுத்து வெட்டி அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us