/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் கலை திருவிழா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
குன்னுாரில் கலை திருவிழா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
குன்னுாரில் கலை திருவிழா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
குன்னுாரில் கலை திருவிழா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 28, 2024 11:26 PM

குன்னுார் : 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற தலைப்பில் நடந்த கலை திருவிழா நடன போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தினர்.
குன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில், குன்னுார் வட்டார அளவிலான கலை திருவிழா நடந்து வருகிறது.
மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் மேற்பார்வையில் துவங்கிய இந்த கலை திருவிழாவில், 41 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
அதில், நடன போட்டியில் இயற்கை பாதுகாப்பு; பிளாஸ்டிக் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், பல்வேறு ஆன்மிக அவதாரங்களின் வேடமணிந்த மாணவ, மாணவியரின் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜுணன், கவுன்சிலர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற பள்ளிகளுக்கான பரிசுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.