/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'செயற்கை நுண்ணறிவும், காலநிலை மாற்றமும்' ; அரசு பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு
/
'செயற்கை நுண்ணறிவும், காலநிலை மாற்றமும்' ; அரசு பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு
'செயற்கை நுண்ணறிவும், காலநிலை மாற்றமும்' ; அரசு பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு
'செயற்கை நுண்ணறிவும், காலநிலை மாற்றமும்' ; அரசு பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு
ADDED : ஏப் 01, 2025 09:49 PM
கோத்தகிரி; 'கோத்தகிரி சோலுார் மட்டம் அரசு உயர்நிலை பள்ளியில், 'செயற்கை நுண்ணறிவும், காலநிலை மாற்றமும்' என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது:
இன்றைய நவீன உலகில் மிக வேகமாக முன்னேறி வருவது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமாகும். சில ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த தொழில்நுட்பம், மனித சமுதாயத்தை தன் கைபிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த தொழில்நுட்பம், 'ஏஐ ஏஜென்ட்' என்ற புதிய செயலியுடன் இன்று களம் இறங்கியுள்ளது.
இந்த செயலியை தொடர்பு கொள்ளும் ஒருவரின் கண்களை வைத்து அவரை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களது முக பாவத்தை கொண்டு அவரது எண்ணங்களையும், அவரது உடல்நிலை பற்றிய அனைத்து தகவல்களையும், இந்த செயலி அறிந்து கொண்டு, பயனாளிக்கு தேவையான தனது கருத்துக்களை அளிக்கும்.
இதன் மூலம், மனித மூளையின் சிந்திக்கும் திறன் படிப்படியாக குறையும். அந்த இடத்தை இந்த தொழில்நுட்பம் பிடித்து கொள்ளும். விவசாயம், ராணுவம், ஸ்டாக் மார்க்கெட் மற்றும் வங்கி போன்ற பல துறைகளிலும், அதன் செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும்.
காலநிலை மாற்றத்தின் அனைத்து விவரங்களையும், செயற்கை நுண்ணறிவு சேர்த்து வைத்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், கடந்த, 50 ஆண்டுகளில், முதல் 10 ஆண்டில் புவிவெப்பம், 0.1, இரண்டாம் பத்து ஆண்டில், 0.2 எனவும், ஐந்தாம், 10 ஆண்டில் புவி வெப்பம், 0.5 செ.கி., உயர்ந்துள்ளதாக கூறுகிறது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில், 2050ம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை, 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை உயரும். இரண்டு டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உயர்வில், கோதுமை தன்னுடைய உற்பத்தியை நிறுத்திக் கொள்ளும். 2.5 டி.சென்டிகிரேட்டில், அரிசி உற்பத்தி பெருமளவில் குறையும். இவ்வாறு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சி இனங்களின் காலநிலை மாற்ற விளைவுகளை பற்றி செயற்கை நுண்ணறிவு விரிவாக எச்சரித்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.