/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு தொழிற்சாலை தேர்தல்: என்.இ.யு., தொழிற்சங்கம் வெற்றி
/
அருவங்காடு தொழிற்சாலை தேர்தல்: என்.இ.யு., தொழிற்சங்கம் வெற்றி
அருவங்காடு தொழிற்சாலை தேர்தல்: என்.இ.யு., தொழிற்சங்கம் வெற்றி
அருவங்காடு தொழிற்சாலை தேர்தல்: என்.இ.யு., தொழிற்சங்கம் வெற்றி
ADDED : ஜன 29, 2024 11:45 PM
குன்னுார்;அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த ஜே.சி.எம்., தேர்தலில் என்.இ.யு.,(காங்.,) தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஜே.சி.எம்., உயர்மட்ட குழுக்களை அமைக்க, உறுப்பினர்கள் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட, 3 சம்மேளனங்களின் கீழ் உள்ள தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. ஐ.என்.டி.டபிள்யூ., -என்.இ.யு., சங்கங்கள்; பி.பி.எம்.எஸ்., -டி.எப்.எல்.யு., சங்கங்கள்; ஏ.ஐ.டி.இ.எப்., -சி.எப்.எல்.யு., சங்கங்கள், 3 குழுவாக போட்டியிட்டன. கடந்த வாரம் நடந்த தேர்தலில், 1,040 தொழிலாளர்கள் ஓட்டளித்தனர்.
தொடர்ந்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெட்டிகள் திறக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டன.
அதில், என்.இ.யு., 415; சி.எப்.எல்.யு., 372; டி.எப்.எல்.யு., 242 ஓட்டுக்கள் பெற்றன. என்.இ.யு., வெற்றி பெற்றதை தொடர்ந்து தொழிலாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த, 2010 ஆண்டுக்கு பிறகு தற்போது தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.