/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு டி.எப்.எல்.யு., சங்க பொதுக்கூட்டம்
/
அருவங்காடு டி.எப்.எல்.யு., சங்க பொதுக்கூட்டம்
ADDED : மே 12, 2025 10:40 PM
குன்னுார், ; குன்னுார் அருவங்காடு, டிபன்ஸ் பேக்டரி தொழிலாளர் சங்கம் (டி.எப்.எல்.யு.,) பொது மகா சபை கூட்டம், சி.எப்.ஆர்.சி., கிளப்பில் நடந்தது.
முகமது அன்சர் தலைமை வகித்தார். நிர்வாகி குமார் வரவேற்றார். பொருளாளர் மணி, வரவு செலவு கணக்குகளை வாசித்தார். சங்க செயல்பாடு குறித்து பொதுச் செயலாளர் வெங்கடேஷ் ராவ் பேசினார்.
சிறப்பு விருந்தினராக, நீலகிரி மாவட்ட பி.எம்.எஸ்., தலைவர் மகேஸ்வரன், பி.பி.எம்.எஸ்., உறுப்பினர் கணேஷ் மூர்த்தி பங்கேற்றனர். நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்ட பணி குழு மற்றும் கேன்டீன் மேனேஜிங் கமிட்டி உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இணை செயலாளர் சிவக்குமார் தீர்மானங்களை வாசித்தார். நிகழ்ச்சியை, பிரேம்குமார் தொகுத்து வழங்கினார். ரங்கநாதன் நன்றி கூறினார்.