/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு விநாயகர் கோவில் திருவிளக்கு பூஜை
/
அருவங்காடு விநாயகர் கோவில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 07, 2025 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு விநாயகர் கோவிலில், ஆடியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆடி மாதத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அருவங்காடு விநாயகர் கோவிலில் காலை, 8:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. பலரும் வழிபாடுகள் நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் செய்தனர். இதேபோல, இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.