/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை; சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கணும்
/
படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை; சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கணும்
படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை; சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கணும்
படித்த வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை; சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்கணும்
UPDATED : ஜூலை 26, 2025 07:43 AM
ADDED : ஜூலை 25, 2025 08:33 PM
ஊட்டி; 'படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு, 600 ரூபாய், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய் ,பட்டதாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
பதிவு புதுப்பிப்பு அவசியம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து , 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 72 ஆயிரம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
சுய உறுதி ஆவணம் விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தனியார் துறை சுய வேலை வாய்ப்பிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது, பள்ளி கல்லூரி கல்வியை முழுமையாக தமிழகத்தில் படித்திருக்க வேண்டும். பெற்றோர் பாதுகாவலர் குறைந்தது, 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சமூக நலத்துறை போன்ற துறைகள் , தனியார் துறையில் பணிபுரிந்து வருங்கால வைப்பு நிதி தொகை செலுத்துபவராக இருக்க கூடாது.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே இந்த உதவி தொகை பெற்று வரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள், அடுத்த மாதத்திற்குள் சுய உறுதி ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.