/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'போதை வஸ்துகளை தடுக்க தான் மதுக்கடையை மாற்றவில்லை' சொல்கிறார் உதவி பொது மேலாளர்
/
'போதை வஸ்துகளை தடுக்க தான் மதுக்கடையை மாற்றவில்லை' சொல்கிறார் உதவி பொது மேலாளர்
'போதை வஸ்துகளை தடுக்க தான் மதுக்கடையை மாற்றவில்லை' சொல்கிறார் உதவி பொது மேலாளர்
'போதை வஸ்துகளை தடுக்க தான் மதுக்கடையை மாற்றவில்லை' சொல்கிறார் உதவி பொது மேலாளர்
ADDED : டிச 24, 2025 06:09 AM
குன்னுார்: 'குன்னுாரில் பள்ளி, வழிபாட்டு ஸ்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மாற்றும் கோரிக்கைக்கு, போதை வஸ்துக்கள் புழக்கம் இருப்பதால், மதுகடையை மூடிவிட்டால் சமூக சீர்கேடு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்,' என, டாஸ்மாக் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குன்னுார் வண்டிச்சோலை அருகே உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் நுகர்வோர் குழுக்களின் காலாண்டு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், குன்னுார் மக்கள் அமைப்பு செயலாளர் ஆல்துரை பேசுகையில்,''குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால், அருகிலுள்ள அரசு மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். வாகன நெரிசலும் ஏற்படுகிறது. இந்த கடையை இடமாற்றம் செய்ய, பலமுறை வலியுறுத்தி, கலெக்டர் முதல் தமிழக முதல்வர் வரை பல மனுக்கள் அனுப்பியும், இந்த கடை இங்கிருந்து மாற்றப்படவில்லை,'' என்றார்.
டாஸ்மாக் உதவி பொது மேலாளர் சங்கர் பேசுகையில், ''குன்னுார் நகரில் ஒரு டாஸ்மாக் கடை மட்டுமே உள்ளது. இங்கு இடுகாடு பகுதி உட்பட பல இடங்களில் கஞ்சா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் அதிகளவில் கிடைப்பதால், மதுகடைகளை மூடிவிட்டால், போதை பொருட்கள் அதிகரித்து சமூக சீர்கேடுகளும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும்.
''எனவே, சமூக நலன் கருதியே இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடாமல் இருக்கிறோம். இந்த கடையை மாற்ற தேர்வு செய்த இரு இடங்களும் ஆட்சேபனை எழுந்ததால், கடையை இங்கிருந்து மாற்ற முடியவில்லை. வேறு இடம் கிடைத்தால் இடமாற்றம் செய்வோம். உங்களுக்கு தெரிந்த இடம் இருந்தாலும் கூறுங்கள்,'' என்றார்.

