/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தவணை கட்டாதவர் மீது தாக்குதல்; தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
/
தவணை கட்டாதவர் மீது தாக்குதல்; தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
தவணை கட்டாதவர் மீது தாக்குதல்; தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
தவணை கட்டாதவர் மீது தாக்குதல்; தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
ADDED : ஜூன் 12, 2025 09:45 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் கடன் தவணை செலுத்தாத கார் 'ஆக்டிங்' டிரைவரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியை சேர்ந்தவர் போஜ்குமார். இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக, காமராஜர் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து, நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
மாதந்தோறும், 16, 117 ரூபாய் தவணைத் தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம், 10ம் தேதி செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்தவில்லை.
இந்நிலையில், போஜ்குமார் பணியை முடித்து நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டு வாசலில் நின்றிருந்த, தனியார் நிதி நிறுவன மேலாளர் யாபேஸ் , கலெக்சன் ஏஜென்ட்கள் நவீன் மற்றும் சதீஷ் ஆகியோர், 'தவணைத் தொகையை ஏன் கட்டவில்லை,' என, தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
தொடர்ந்து, போஜ்குமாரை நிதி நிறுவன மேலாளர் யாபேஸ், வாயில் குத்தி தாக்கியதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து போஜ்குமார் கொடுத்த புகாரின்படி, கோத்தகிரி போலீசார், மூவர் மீது வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன மேலாளர் யாபேஷை கைது செய்தனர்