/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி கொலை முயற்சி
/
செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி கொலை முயற்சி
ADDED : ஆக 01, 2025 07:45 PM

பாலக்காடு; பாலக்காட்டில், செருப்பு தைக்கும் ஊசியால் குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், தேனியை சேர்ந்தவர் ஜெயபாண்டி, 60. இவர், பாலக்காடு அரசு பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் செருப்பு தைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் செருப்பு தைக்கும் இடத்தில் அமைத்திருந்த ெஷட்டில், பாலக்காடு மாவட்டம், முண்டூர் ஒருவங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜன், 48, என்பவர் குடிபோதையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறியும், ராஜன் நகராததால், கோபமடைந்த ஜெயபாண்டி செருப்பை தைக்கும் ஊசியால் அவரை தாக்கினார். இதில், படுகாயமடைந்த ராஜனை, அப்பகுதி மக்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் ஜெயபாண்டியை கைது செய்தனர்.