UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:26 PM

அ நிறம் | அளவு
கூடலுார்:
கூடலுார் புளியாம்பாறை கோவில் அருகே நிறுத்தப்பட்ட ஆட்டோ, அதிகாலையில் எரிக்கப்பட்டது குறித்து தேவர்சோலை போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடலுார் மங்குலி பகுதியை சேர்ந்த கிரி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை, புளியம்பாறை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம், இரவு, 10:30 மணிக்கு, வழக்கம்போல் புளியாம்பாறை பகுதியில் வீட்டின் அருகே கோவில் வளாகத்தில், ஆட்டோவில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை, 2:30 மணிக்கு ஆட்டோ தீ பற்றி எரிவதாக அவருக்கு அவருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்று, தீயை கட்டுபடுத்த முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. சம்வம் குறித்து தேவர்சோலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
