/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆட்டோ ஓட்டுனர்கள் தர்ணாவால் பரபரப்பு: 'பர்மிட்' அனுமதி வழங்க வலியுறுத்தல்
/
ஆட்டோ ஓட்டுனர்கள் தர்ணாவால் பரபரப்பு: 'பர்மிட்' அனுமதி வழங்க வலியுறுத்தல்
ஆட்டோ ஓட்டுனர்கள் தர்ணாவால் பரபரப்பு: 'பர்மிட்' அனுமதி வழங்க வலியுறுத்தல்
ஆட்டோ ஓட்டுனர்கள் தர்ணாவால் பரபரப்பு: 'பர்மிட்' அனுமதி வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 08:50 PM

ஊட்டி; அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, பெண் மற்றும், திருநங்கை ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாங்குவதை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
அவர்களுக்கான சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், 'புதிய ஆட்டோ வாங்க, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்,' என, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, மாநிலம் முழுவதும் பலரும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் ஆட்டோ வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி நகரில் ஆட்டோ ஓட்டும் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் வித்யா, சென்னம்மா, பிலோமினா, ஆஷா, நித்யா, லதா, ஜெஷிந்தா ஆகியோர், 'ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,' என கூறி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதாவது: ஊட்டி நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறோம். அரசு பெண்களுக்கு மகளிர் ஆட்டோ நலவாரிய அலுவலகத்தின் மூலம் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் நலவாரிய அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி, எங்களுக்கு 'பர்மிட்' அனுமதி வழங்கவில்லை.
கடந்த ஒரு மாதமாக அலைந்து கொண்டு இருக்கிறோம். மேலும் ஒரு லட்சம் மானியம் இல்லாமல் மீதம் இருக்கும் தொகையை நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி பணம் செலுத்தி விட்டோம். இதையடுத்து வருகிற மாதம் இ.எம்.ஐ .,தொகை செலுத்த வேண்டும். எனவே, பெண்களுக்கு என்று கொடுத்த மானியத்துடன் கொடுத்த ஆட்டோவை எங்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.