/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
/
யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
யானை நடமாட்டத்தை கண்காணிக்க ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2025 09:12 PM
பந்தலுார்; 'பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட ரோந்து வாகனத்தை அதிகப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை யானைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஏற்கனவே ஊராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பிதர்காடு வனச்சரகத்தில், 'இந்திய டிரைவர்ஸ் அசோசியேசன்' சார்பில் வழங்கப்பட்டுள்ள மனுவில், 'இரவு நேர வனத்துறையின் ரோந்து வாகனங்களை அதிக படுத்த வேண்டும்; சாலை மற்றும் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள யானைகளை அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்; இரவு நேர ரோந்து வன பணியாளர்களை அதிகப்படுத்துவதுடன், வாகனங்களை யானைகள் தாக்கினால் அதற்குரிய இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்,' என, வலியுத்தப்பட்டுள்ளது.