/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆட்டோ - -ஜீப் மோதி விபத்து; டிரைவர் உட்பட 4 பேர் காயம்
/
ஆட்டோ - -ஜீப் மோதி விபத்து; டிரைவர் உட்பட 4 பேர் காயம்
ஆட்டோ - -ஜீப் மோதி விபத்து; டிரைவர் உட்பட 4 பேர் காயம்
ஆட்டோ - -ஜீப் மோதி விபத்து; டிரைவர் உட்பட 4 பேர் காயம்
ADDED : ஜூன் 16, 2025 08:59 PM
கூடலுார்; கூடலுார் பாடந்துறை அருகே, ஜீப்- ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட, 4பேர் காயமடைந்தனர்.
கூடலுாரில் இருந்த நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, மூன்று பயணிகளுடன் ஆட்டோ தேவர்சோலை நோக்கி சென்றது. ஆட்டோவை தேவர்சோலை சேர்ந்த கார்த்திக்,28, ஓட்டி சென்றார். பாடந்துறை அருகே, ஆட்டோவும் எதிரே வந்த 'பிக்-அப்' வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஆட்டோ டிரைவர், அதில் பயணித்த தேவர்சோலை சேர்ந்த சுஜி, சாந்தராஜ், குமார் ஆகியோர் காயமடைந்தனர். கார்த்திக் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த பயணிகள், கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். தேவர்சோலை போலீசார் விசாரிக்கின்றனர்.