/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட எல்லையில் சுற்றுலா வாகன இ--பாஸ் ஆய்வுக்கு தானியங்கி பூம் பேரியர்! அனைத்து சோதனை சாவடிகளில் விரைவில் பொருத்த திட்டம்
/
மாவட்ட எல்லையில் சுற்றுலா வாகன இ--பாஸ் ஆய்வுக்கு தானியங்கி பூம் பேரியர்! அனைத்து சோதனை சாவடிகளில் விரைவில் பொருத்த திட்டம்
மாவட்ட எல்லையில் சுற்றுலா வாகன இ--பாஸ் ஆய்வுக்கு தானியங்கி பூம் பேரியர்! அனைத்து சோதனை சாவடிகளில் விரைவில் பொருத்த திட்டம்
மாவட்ட எல்லையில் சுற்றுலா வாகன இ--பாஸ் ஆய்வுக்கு தானியங்கி பூம் பேரியர்! அனைத்து சோதனை சாவடிகளில் விரைவில் பொருத்த திட்டம்
ADDED : ஏப் 03, 2025 11:27 PM

கூடலுார்; நீலகிரி மாவட்ட எல்லைகளில், சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து ஆய்வு செய்ய தானியங்கி, 'பூம் பேரியர்' பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அதிக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்க, ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல், சுற்றுலா வாகனங்களுக்கு, இ--பாஸ் பதிவு நடைமுறையில் உள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை சீசன் நிலவி வரும் நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த கடந்த, 1ம் தேதி முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும், இறுதி நாட்களில், 8,000 வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள, சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்புடன், ஊட்டிக்கு வரும் வாகனங்களுக்கு இ---பாஸ் சோதனை செய்து, அனுமதி வழங்கப்படுகிறது.
கடும் வாகன நெரிசல்
இந்நிலையில், கூடலுார் நாடுகாணி, முதுமலை கக்கனல்லா சோதனை சாவடிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலா வாகனங்களுடன், அரசு பஸ்கள், சரக்கு லாரிகள், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் செல்லும் வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.
இதனால், நாள் முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மேலும், மாநில எல்லையில் இருந்து ஊட்டிக்கு செல்லாமல், கூடலுார் வழியாக, கேரளா வயநாடு, மலப்புரம் செல்லும் வாகனங்களுக்கு, இ--பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவும் வலியறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இ-- பாஸ் சோதனைகளை தனியார் மேற்கொள்ள வசதியாக, சோதனை சாவடி மையத்தை, கூடலுார் 'சில்வர் கிளவுட்' அருகே அமைக்க வாகன டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விரைவில் 'பூம் பேரியர் ஸ்கேன்' வசதி
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,'' மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடி மையங்களில், இ--பாஸ் பெற்று வரும் வாகனங்களில், வாகன பதிவு எண் வாயிலாக, தானியங்கி முறையில் சோதனை செய்யும் வகையில், 'பூம் பேரியர்' எனப்படும் ஸ்கேன் கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கல்லாறு இ--பாஸ் சோதனை சாவடியில், இம்முறை நடைமுறைக்கு வர உள்ளது. தொடர்ந்து மற்ற அனைத்து சோதனை சாவடிகளும் பெருத்தப்படும். இந்த பணிகள் முடிவடைந்தால், வாகன நெரிசல் இன்றி விரைவாக மாநில எல்லைகளை கடந்து செல்ல வழி ஏற்படும்,'' என்றார்.

