/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனைத்து சோதனைச்சாவடிகளில் விரைவில் தானியங்கி கேமரா; சுற்றுலா வாகனங்களை கண்டறிய நடவடிக்கை
/
அனைத்து சோதனைச்சாவடிகளில் விரைவில் தானியங்கி கேமரா; சுற்றுலா வாகனங்களை கண்டறிய நடவடிக்கை
அனைத்து சோதனைச்சாவடிகளில் விரைவில் தானியங்கி கேமரா; சுற்றுலா வாகனங்களை கண்டறிய நடவடிக்கை
அனைத்து சோதனைச்சாவடிகளில் விரைவில் தானியங்கி கேமரா; சுற்றுலா வாகனங்களை கண்டறிய நடவடிக்கை
ADDED : நவ 12, 2024 06:09 AM
ஊட்டி; 'சுற்றுலா பயணிகள் வாகனங்களை கண்டறிய அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரியை பொருத்தவரை கோடைகாலமான ஏப்., மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாவது சீசன் செப்., அக்., மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 'சுற்றுலா பயணிகள்; வாகனங்கள் வருகை குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, இ--பாஸ் முறையே அறிமுகம் செய்ய வேண்டும்,' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
தொடர்ந்து, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இ--பாஸ் நடைமுறையை மாநில அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இ--பாஸ் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்க்கு வந்தது. அப்போது, 'தீபாவளி விடுமுறையின் போது, ஊட்டிக்கு அதிக வாகனங்கள் வந்ததால், இ--பாஸ் சோதனையில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் முறையாக கண்காணிக்க வேண்டும்,' என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதற்கான பணிகள் நீலகிரி எல்லையோர சோதனை சாவடிகளில் துவக்கப்பட்டுள்ளன.
சோதனை சாவடியில் தானியங்கி கேமரா
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த மே மாதம் முதல் இ--பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் முறையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்படுகிறது.
எனினும், இப்பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்களை பதிவு செய்ய அனைத்து சோதனை சாவடிகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும்.
இந்த கேமராக்கள் சோதனை சாவடிகளில் நுழையும் அனைத்து வாகனங்களில் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் நாள்தோறும் ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் கணக்கு எடுக்க முடியும்.
அதேபோல், இந்த கேமராக்கள் மூலம் மீண்டும் அந்த வாகனங்கள் எத்தனை நாட்கள் கழித்து வெளியில் செல்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.
விரைவில் இந்த கேமராக்கள் அனைத்து சோதனை சாவடிகளிலும் பொருத்தப்பட உள்ளது. மேலும், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகளுடன் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.