/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தானியங்கி குடிநீர் வினியோகம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு
/
தானியங்கி குடிநீர் வினியோகம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு
தானியங்கி குடிநீர் வினியோகம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு
தானியங்கி குடிநீர் வினியோகம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு
ADDED : பிப் 05, 2024 12:54 AM
சூலுார்:அரசூரில் உள்ள தானியங்கி குடிநீர் சப்ளை செய்யும் அமைப்பை, கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில், நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் கேட்வால்வுகள் அமைக்கப்பட்டு, வீதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தொட்டியில் தண்ணீர் எவ்வளவு உள்ளது, எந்த கேட்வால்வ் மூலம் தண்ணீர் எந்த வீதிக்கு செல்கிறது என்பது குறித்து மொபைல் போன் வாயிலாக இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.
தொட்டி நிரம்பியவுடன் தானாகவே மோட்டார் ஆப்பாகி விடும். இதன் மூலம், ஊராட்சிக்கு மின் கட்டணம் பெருமளவு குறைந்தது. மேலும், தண்ணீர் வீணாவதும் தடுக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்றிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த அமைப்பின் செயல்பாடுகளை பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அலுவலர்கள், 50க்கும் மேற்பட்டோர் அரசூர் வந்திருந்தனர். அவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் விதம் குறித்து, அரசூர் ஊராட்சி நிர்வாகத்தினர் விளக்கினர்.
இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகையில், 'எங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளிலும் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த முயற்சிகள் எடுக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.

