/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகம் உணவகங்களுக்கு காத்திருக்கிறது விருது
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகம் உணவகங்களுக்கு காத்திருக்கிறது விருது
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகம் உணவகங்களுக்கு காத்திருக்கிறது விருது
பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகம் உணவகங்களுக்கு காத்திருக்கிறது விருது
ADDED : ஆக 23, 2025 02:59 AM
ஊட்டி: பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் உணவு வினியோகிக்கும் உணவகங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதால், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்த கூடாது.
மாறாக, மட்கும் தன்மை உள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு வினியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் சிறந்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஒரு லட்சம் ரூபாயுடன் விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் விருதும் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உள்ளிட்ட குழுவினர், சிறந்த உணவகங்களை பரிசீலனை செய்து, மூன்றாம் நபர் தணிக்கை நிறுவனம் வாயிலாக சம்பந்தப்பட்ட உணவகத்தை கள ஆய்வு செய்வர்.
பின், கூட்டாய்வு குழு பரிந்துரையை உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
சுகாதார மதிப்பீட்டு சான்று அவசியம் அதன்படி, மாநில அளவிலான பரிசீலனை குழு பரிசீலித்து மாவட்டத்திற்கு, தலா ஒரு பெரிய உணவகம், ஒரு சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாக தேர்ந்தெடுத்து விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு உணவகம் வைத்துள்ள விண்ணப்பதாரர், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் , பதிவு சான்றிதழ் பெற்று நடப்பில் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாயிலாக சுகாதார தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டு சான்று பெற்றிருக்க வேண்டும்.
விருது பெற விருப்பம் உள்ளவர்கள் இம்மாதம், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.