/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தெரு கூத்து நடத்தி விழிப்புணர்வு

ADDED : ஏப் 28, 2025 11:29 PM

கோத்தகிரி, ; கோத்தகிரியில் இயற்கை விவசாயம் குறித்து, தெருக்கூத்து நடத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தோட்டக்கலை மலை பயிர்கள் துறை, வேளாண்மை விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 'அட்மா' திட்டம் சார்பில், நடந்த நிகழ்ச்சியில், 'நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, வேதி உரங்களை கூடுமானவரை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதனால், மண் மலடு இல்லாமல், பாதுகாக்கப்படுவதுடன், பயிர்கள் செழித்து வளரும். இதன் மூலம், நுகர்வோரும் பாதுகாக்கப்படுவர்.
மத்திய, மாநில அரசுகளின், தோட்டக்கலை உட்பட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும்.
அங்கக வேளாண்மையின் அறிவுபூர்வ திட்டங்கள் மற்றும் அரசின் மானியங்களை பெற்று விவசாயிகள் பயனடைய முன் வர வேண்டும் ' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி பகுதி இயற்கை விவசாயி ராம்தாஸ் முன்னிலையில், கோத்தகிரி, ஊட்டி குன்னுார் உட்பட, கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.