/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆன்லைனில்' பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு
/
'ஆன்லைனில்' பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 10, 2025 09:23 PM
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், சொத்து பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் 'ஆன்லைன்' வழியாக மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் உள்ள மக்கள், தங்களின் சொத்து வரி, குடிநீர் வரி, வணிகவரி, சொத்து பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் வாயிலாக, மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை முழுமையாக செயல்படுத்தும் வகையில், வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே உத்தரவின் பேரில், வாரிய பகுதிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சின்ன வண்டிச்சோலை சமுதாய கூடத்தில், சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வாரிய வருவாய் ஆய்வாளர் காஞ்சனா தலைமை வகித்து, பேசுகையில்,''வாரியத்தில், கடந்த, 1ம் தேதி முதல் இணையதளம் வழியாக சொத்து பெயர் மாற்றம் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் மக்கள் அணைவரும் தங்களின் சொத்து பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு வீட்டு வரி, வணிகவரி உள்ளிட்ட அனைத்தும் echhawani.gov.in/citizen என்ற இணைய முகவரியில் சென்று பதிவு செய்யலாம்,'' என்றார்.
முன்னாள் துணைத் தலைவர் வினோத் குமார் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை வாரியத்தை சேர்ந்த பிரசாந்த், சரவணன், கன்டோன்மென்ட் ஊழியர்கள் செய்தனர். சின்ன வண்டி சேலை. பேரக்ஸ் மலையப்பன் காட்டேஜ் பொதுமக்கள் வியாபாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அன்னை வேளாங்கண்ணி திருமண மண்டபம், சிங்காரதோப்பு சமுதாய கூடத்தில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடந்தன.