/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி ராணுவ மையத்தில் விழிப்புணர்வு
/
தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி ராணுவ மையத்தில் விழிப்புணர்வு
தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி ராணுவ மையத்தில் விழிப்புணர்வு
தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி ராணுவ மையத்தில் விழிப்புணர்வு
ADDED : மே 07, 2025 01:47 AM

குன்னுார் : நீலகிரியில் துவங்கிய தேசிய என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாமில், பங்கேற்ற முதல் குழுவினர், குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ மையத்தை பார்வையிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேசிய அளவிலான என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாம் துவங்கியது. முத்தொரை பாலாடாவில் உள்ள ஏகலைவா ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில், துவங்கிய இந்த பயிற்சியை, கோவை மாவட்ட குழு கமாண்டர் கர்னல் ராமநாதன் துவக்கி வைத்தார்.
வரும், 11ம் தேதி வரை நடந்து வரும் முதற்கட்ட முகாமில், தமிழகம், புதுவை அந்தமான் நிக்கோபார், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, கோவா மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 510 மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
அதில், முதல் குழுவினர், குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம், ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மலை ரயிலில் பயணம் செய்து, ரயில் நிலையங்களில் குப்பைகள் அகற்றி துாய்மை செய்தனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர்.
என்.சி.சி.,அதிகாரிகள் கூறுகையில்,'மாணவியரிடையே தேசிய ஒருமைப்பாடு, உடல் வலிமை, மனவலிமை, தேசிய நல்லிணக்கம், ஆகியவற்றை வளர்ப்பதற்காக இந்த மலையேற்ற பயிற்சி நடத்தப்படுகிறது. ராணுவத்தின் பெருமையை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் இயற்கை அழகை ரசிப்பதுடன் இயற்கையை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். தற்போது தனித்தனியாக பிரிக்கப்பட்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், 13ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது,'' என்றனர்.