/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
/
பெண் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 07, 2025 08:56 PM

பந்தலுார்; பந்தலுார் தாசில்தார் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழுந்தைகளுக்கு கற்பிப்போம்,' எனும் தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செவிலியர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள் பங்கேற்ற முகாமில், சமூக நலத்துறை சார்பில், குமார் துவக்கி வைத்து பேசுகையில், ''வேலைக்கு செல்லும் பெண்கள், தங்களின் வேலைக்கு ஏற்ப தங்களின் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிரச்னைகளை கையாளவும், அவற்றை எதிர்கொள்ளவும் தங்களை தயார் படுத்தி கொள்வதுடன், பெண் குழந்தைகளை படிக்க வைப்பது மற்றும் பெண்களுக்கு சமூகத்தில், ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் எண்ணம் ஏற்பட வேண்டும். மேலும், சமூக நலத்துறை பெண்களின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதனை பயன்படுத்தவும் பெண்கள் முன்வர வேண்டும்,''என்றார்.
பயிற்சியாளர் ரவீந்திரன் பேசுகையில், ''மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, நம்மை மாற்றி கொள்வது அவசியம். சுய மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம், பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வதன் மூலம் திறமைகளை வளர்த்து கொள்ளவும், தங்களை மேம்படுத்தி கொள்ளவும் இயலும். நோக்கம், நேர மேலாண்மை,தலைமை பண்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினால் சமூகத்தில் வளர்ச்சி காண முடியும்,''என்றார்.
'ஆல் தி சில்ட்ரன்' ஒருங்கிணைப்பாளர் அஜீத், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு சமுதாயத்தில் உள்ள பங்களிப்பு குறித்து பேசினார்.