/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு விவசாயிகளுக்கு கிராமம் தோறும் விழிப்புணர்வு; நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை பயன்படுத்த அறிவுரை
/
உருளை கிழங்கு விவசாயிகளுக்கு கிராமம் தோறும் விழிப்புணர்வு; நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை பயன்படுத்த அறிவுரை
உருளை கிழங்கு விவசாயிகளுக்கு கிராமம் தோறும் விழிப்புணர்வு; நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை பயன்படுத்த அறிவுரை
உருளை கிழங்கு விவசாயிகளுக்கு கிராமம் தோறும் விழிப்புணர்வு; நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை பயன்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 02, 2025 10:10 PM

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளை கிழங்குக்கு நல்ல ருசி இருப்பதால், மாவட்ட முழுவதும், 8,000 ஏக்கரில் உருளை கிழங்கு விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தவிர, ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
உற்பத்தி சமயத்தில், நாள்தோறும் சராசரியாக, 40 லாரிகளில் (80 கிலோ துண்டு: 100 மூட்டை) மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தரம் பிரிக்கப்பட்டு வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு பயிற்சி
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பிற மலை காய்கறி விவசாயத்தை காட்டிலும் , மூன்று போகத்தில் உருளைகிழங்கு சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளை பெற்று சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில், ஊட்டி அருகே, முத்தோரை பகுதியில் உள்ள மத்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், மத்திய உருளை கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் தரமான விதை உருளை கிழங்கு உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் குறித்த அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், இரு கால பயிர்களுக்கு இடையே குறைந்த கால இடைவெளியில் பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது.
என்னென்ன ரகங்கள்
காலநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், நீலகிரியில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களின் முக்கியத்துவம் மற்றும் உருளை கிழங்கு விதை தன்னிறைவு பெறுவதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
அதில், 'குப்ரீ ஜோதி, குப்ரீ ஸ்வர்ண, ஜூபிரீ, குப்ரீ ஹிமாலினி, குப்ரீ சஹ்யத்ரி, குப்ரீ கரன்' விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், 'குப்ரீ கரன், குப்ரீ ஹிமாலினி மற்றும் ஜூப்ரீ கிரிதாரி,' ரகங்கள் இலை கருகு நோய்க்கு எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும்,'குப்ரீ ஸ்வர்ண மற்றும் குப்ரீ சஹ்யத்ரி' ரகங்கள் நுால் புளூ எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாகவும் இந்த ரகங்களை சரியான பருவத்தில் வளர்ப்பது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''விவசாயிகள் உருளைகிழங்கு சாகுபடியை அதிகரிக்க தோட்டக் கலை துறை மூலம் தேவையான நடவடிக்கைகள் , அந்தந்த வட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தோட்டக்கலை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், விவசாய உற்பத்தி பெருக்குவதற்கு இயற்கை முறை விவசாயத்தை பின்பற்ற வேண்டும். மண் வளம் குறித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தோட்டக்கலை, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

