/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எச்சில் இல்லாத நகரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
எச்சில் இல்லாத நகரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 17, 2025 10:25 PM

குன்னுார்; குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுார் வணிகவியல் முதுகலை ஆராய்ச்சி துறை சார்பில், எச்சில் இல்லாத நீட்டிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் ரயில் நிலையத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் கோபிநாத் தலைமையில், சுற்றுலா பயணிகளுக்கு மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சுகாதார பிரிவினருடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி பேராசிரியை சசிரேகா விழிப்புணர்வு நோக்கம் குறித்து பேசினார்.
காவல் துறை சார்பில் மாணவியருக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியைகள் ஜாக்குலின் மார்ட்டின், கோமதி மற்றும் 3ம் ஆண்டு பி.காம்., மாணவியர் செய்திருந்தனர்.

