/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 27, 2025 10:11 PM
கூடலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி கனவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுபாஷினி தலைமை வகித்து பேசினார்.
உயர்கல்வி அவசியம் குறித்து இயற்பியல் துறை தலைவர் அர்ஜுனன் விளக்கினார். தொடர்ந்து, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அதன் முக்கியத்துவம் குறித்து துறைத்தலைவர்கள் விளக்கினர்.
கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம், அலுவலகம், வகுப்பறைகள், மாணவர்கள் தங்கும் விடுதிகளை மாணவர்கள் பார்வையி ட்டனர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், கூடலூர் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

