/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிர் குழுக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
/
மகளிர் குழுக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
மகளிர் குழுக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
மகளிர் குழுக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 13, 2025 09:19 PM
கோத்தகிரி,; கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில், சட்டம் குறித்து மகளிர் குழுக்களுக்கு, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட வளங்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், 'அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தரமான எண்ணெயில் உருவாக்கப்பட்டதா என்பதை அறிந்து, அந்த குறிப்பிட்ட பதார்தங்களை மட்டும் மக்கள் உண்ண வேண்டும். இதனால், உடல் உபாதைகள் தவிர்க்கப்படுவதுடன் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும், தர சான்றிதழ் உடைய பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்க, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் குழுக்களுக்கு உண்டான சட்டத்தை எவ்வாறு பெறுவது,' என, வலியுறுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது.