/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெற்றோருக்கு நவீன செயலி விளக்க விழிப்புணர்வு கூட்டம்
/
பெற்றோருக்கு நவீன செயலி விளக்க விழிப்புணர்வு கூட்டம்
பெற்றோருக்கு நவீன செயலி விளக்க விழிப்புணர்வு கூட்டம்
பெற்றோருக்கு நவீன செயலி விளக்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 12, 2025 10:48 PM
கோத்தகிரி, ; கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த நவீன செயலி விளக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், மருத்துவர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் மேகராஜ், செயலி சார்ந்த விளக்கம் அளித்தார். 'கல்வித் துறை ஆணைப்படி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தங்களது மொபைல் போனில், 'மணற்கேணி ' செயலியை பதிவிறக்கம் செய்து, கல்விச்சார்ந்த தகவல்களை பெற்று, தங்களது குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவ வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
மேலும், பெற்றோரின் ஆண்ட்ராய்ட் போனிற்கு மணற்கேணி என்ற செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில், பெற்றோர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.