/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித --வன விலங்கு முரண்பாடு தெரு நாடகத்தில் விழிப்புணர்வு
/
மனித --வன விலங்கு முரண்பாடு தெரு நாடகத்தில் விழிப்புணர்வு
மனித --வன விலங்கு முரண்பாடு தெரு நாடகத்தில் விழிப்புணர்வு
மனித --வன விலங்கு முரண்பாடு தெரு நாடகத்தில் விழிப்புணர்வு
ADDED : மார் 23, 2025 10:20 PM

கூடலுார் : மனித - வனவிலங்கு முரண்பாட்டை தவிர்ப்பது குறித்து, கூடலுார் வனத்துறையினர் தெரு நாடகம் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கூடலுார் வன கோட்ட பகுதியில், மனித -வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து வனத்துறையினர், தெரு நாடக நடத்தி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கூடலுார் தொரப்பள்ளி, கோழிபாலம் பகுதிகளில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை வனவர் வீரமணி துவக்கி வைத்தார்.
அதில், பாடல் மற்றும் நாடகம் நடத்தி, யானை- மனித மோதலுக்கான காரணங்கள், அதனை தவிர்ப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில்,'கூடலுார் வன கோட்டத்தில், மனித -வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, மனித -வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்,' என்றனர்.