தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உறுதிமொழி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு

மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உறுதிமொழி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு

மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உறுதிமொழி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு


ADDED : ஆக 20, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, மாவட்ட அளவிலான உறுதிமொழி ஏற்று கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பொதுமக்களிடம் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக. மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த உறுதிமொழி மற்றும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், தனியார் மருத்துவமனைகள், பொதுத்துறை வங்கிகள், காவல் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் , திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘லோகோ’ கலெக்டரால் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us