/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
களத்தில் உள்ள ஆஷா பணியாளருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
/
களத்தில் உள்ள ஆஷா பணியாளருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
களத்தில் உள்ள ஆஷா பணியாளருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
களத்தில் உள்ள ஆஷா பணியாளருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
ADDED : ஆக 29, 2025 09:12 PM
ஊட்டி; 'ஆஷா' பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், 55 ஆஷா பணியாளர்களுக்கு இளவயது கர்ப்பம், போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா பேசியதாவது:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த சட்டம் பாயும்.
பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
கடுங்காவல் தண்டனை நிச்சயம் இந்த சட்டத்தில், 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஓர் ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கூறுவதற்கு குழந்தைகள், பெற்றோருக்கு இன்னமும் தயக்கம் உள்ளது.
எனவே, ஆஷா பணியாளர்கள் களப்பணிக்கு செல்லும்போது அங்கு குழந்தைகள் மீது நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.