/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் நலனுக்கு 'அட்வைஸ்'
/
விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் நலனுக்கு 'அட்வைஸ்'
ADDED : பிப் 12, 2025 10:46 PM
குன்னுார்; குன்னுார் பிரகதி தொழில் மையத்தில், இந்திய குடும்ப நல சங்கம் நீலகிரி கிளை சார்பில், இனப்பெருக்க நல நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய குடும்ப நலசங்க டாக்டர் ஆனந்தவல்லி தலைமை வகித்து பேசுகையில், ''மகளிர் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவை, தாங்களே எடுத்து மன உறுதியுடன் இந்த சமூகத்தை வழி நடத்தும் அளவிற்கு தைரியமுடன் வாழ வேண்டும்; சமத்துவம், திருமண முடிவுகள், குழந்தை பெறுவது; குடும்ப கட்டுப்பாடு தீர்மானிக்கும் உரிமைகளை, சாதி, சமய, சடங்குகள் கடந்து எடுக்கவேண்டும்,'' என்றார்.
செவிலியர்கள் ரமாதேவி,பழனியம்மாள், சுகுணா ஆகியோர், 'இந்திய குடும்பநல சங்க மருத்துவமனையில் மகளிர் நலனுக்கான முன்னுரிமை சேவைகள்,' குறித்து பேசினர்.

