/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கலை கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கலை கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 21, 2025 08:53 PM
ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில், இந்திய குடும்ப நலச் சங்கம் நீலகிரி கிளை சார்பில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி கணிதவியல் துறை இணை பேராசிரியர் லுார்து மேரி வரவேற்றார்.
குடும்ப நல சங்க நீலகிரி கிளை மருத்துவர் ஆனந்தவல்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்லுாரி மாணவர்களுக்கு, 'பாலினம், பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை, ஜாதி மத பேதமின்றி வாழும் அதிசயத்தின் முக்கியத்துவம்,' குறித்து பேசினார்.
மருத்துவ செவிலியர் லேயால் சத்யாவதி, 'மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் இனகவர்ச்சி, பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சம வயதினர் இடையே, ஏற்படும் ஒரு வித மன அழுத்தம்,' குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கருத்து பகிர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். பரமேஸ்வரி நன்றி கூறினார். இந்திய குடும்ப நலச் சங்க கிளை உறுப்பினர்கள் சுந்தராம்பாள், சவுமியா மற்றும் கல்லுாரி பேராசிரியர் மது ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

