ADDED : ஜூலை 17, 2025 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் நன்கம் மருத்துவமனையில், டாக்டர் கப்பினிபதி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில், நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கு, தலைமை வகித்த தலைமை மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனுசுயா, பெண்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாடு, ஆரோக்கியம், சுகாதார பாதுகாப்பு, நன்மைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

