UPDATED : நவ 27, 2026 06:28 PM
ADDED : நவ 27, 2026 06:24 PM

பந்தலுார்: பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மழைநீர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘இரண்டாவது சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் தேவாலா பகுதியில், காலநிலை மாற்றத்தால் தண்ணீருக்கு திண்டாடும் சூழல் உருவாகி உள்ளது. இதே போல், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேவைக்காக போராடும் நிலையில், அதனை சேமித்து வைக்க அனைவரும் முன்வர வேண்டும். வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை குறைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, பேரணி பந்தலுார் பஜார் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன், ஆசிரியர் தண்டபாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
