/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக மகளிர் தினத்தை நிகழ்ச்சி: கோத்தகிரியில் விழிப்புணர்வு பேரணி
/
உலக மகளிர் தினத்தை நிகழ்ச்சி: கோத்தகிரியில் விழிப்புணர்வு பேரணி
உலக மகளிர் தினத்தை நிகழ்ச்சி: கோத்தகிரியில் விழிப்புணர்வு பேரணி
உலக மகளிர் தினத்தை நிகழ்ச்சி: கோத்தகிரியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 05, 2024 12:39 AM
கோத்தகிரி;கோத்தகிரி அந்தோணியார் நடுநிலை பள்ளி 'நீலா கைம்பெண்கள் இயக்கம்' சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி, காமராஜர் சதுக்கம் வழியாக வந்தது. பேரணியில், பேண்டு வாத்தியதுடன், கைம்பெண்களின் ஆடல் பாடல், சொற்பொழிவு இடம்பெற்றது.
தொடர்ந்து, பள்ளியில் நடந்த கூட்டத்தில், பெண்களின் பண்புகள், தலைமைத்துவம், விதவை கோலம், கல்வி வேலை வாய்ப்பு, முற்போக்கு சிந்தனை உள்ளிட்ட பெண்களின் மாண்பு குறித்து விளக்கப்பட்டது.
மேலும், கைம்பெண்களுக்கு கண்ணாடி வளையல், சந்தன குங்குமத்துடன், மலர் சூடி கலாசார மாற்றம் உருவாக்கப்பட்டதுடன், அனைத்து பெண்களும் பிறவியால் சமமானவர்கள் என வலியறுத்தப்பட்டது.
அதில், பெரிய பள்ளிவாசல் துணை தலைவர் பாவா சிக்கந்தர், மாரியம்மன் கோவில் கமிட்டி உறுப்பினர் வடிவேல், நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால், அருட் சகோதரிகள் ஸ்டெல்லா பல்தகாத்,லுார்து பெர்னார்ட், கொச்சு தெரேசா உட்பட, பலர் பங்கேற்றனர்.