/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை பழக்கத்தின் தீமைகள்; விழிப்புணர்வு பேரணி
/
போதை பழக்கத்தின் தீமைகள்; விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 26, 2025 09:16 PM

--நிருபர் குழு-
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான, மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு பேரணி நடந்தது. ஊட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி., நிஷா தலைமை வகித்தார். நகர வீதிகளில் மாணவர்கள் மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். போதை ஒழிப்புக்கான உறுதி மொழியை எடுத்தனர்.
* குன்னுாரில் நடந்த பேரணியை, டி.எஸ்.பி., ரவி துவக்கி வைத்தார். பெட்போர்டு பகுதியில் துவங்கிய பேரணி மேரீஸ் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில, மேரீஸ் பள்ளி, ஆண்டனிஸ் பள்ளி மாணவ, மாணவியர், பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.
அருவங்காட்டில், டெம்ஸ் பள்ளி மாணவர்கள், வெலிங்டனில் ஆன்ஸ் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அருவங்காடு, வெலிங்டனில் துவங்கிய பேரணிகளை, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.
* கோத்தகிரியில் ஒரசோலை லயன்ஸ் கிளப் சார்பில், உலக போதை ஒழிப்பு நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 19 ஊர் தலைவர் ராமா கவுடர் முன்னிலை வதித்தார். மார்க்கெட் பகுதியில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் மார்க்கெட் திடலை அடைந்தது.
கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, போதைக்கு எதிரான பதாகைகளுடன், கோஷம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து நடந்த மனித சங்கலியை, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
பிரம்ம குமாரிகள் அமைப்பினர், விஸ்வ வித்யாலயா அங்கத்தினர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினர்.
* மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் துவங்கி மஞ்சூர் பஜார் வரை சென்ற பேரணியில், மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் பங்கேற்று போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்தன.