/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
/
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 18, 2024 12:31 AM

ஊட்டி:அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நீலகிரியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி அருகே டி.ஆர்.,பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா துவக்கி வைத்தார்.
பின், மாணவர் சேர்க்கையின் முக்கியத்துவத்தை வரிவாக எடுத்து கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவி குஷ்பு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில், ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ராஜேந்திரன், ரெனிதா பிரபாவதி, சாந்தகுமாரி, அங்கன்வாடி ஆசிரியை ரஞ்சிதா, அமைப்பாளர் பரிமளா உள்ளிட்டோர், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்து படிக்க வைப்பதன் அவசியம் குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஹேரி உத்தம் சிங், முன்னிலையில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.

