நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, ; ஊட்டி நகராட்சி துவக்க பள்ளியில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக மாணவர்கள் சார்பில் விவசாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் மற்றும் செயல்பாட்டிற்காக பல்கலைகழக இளம் அறிவியல் நான்காம் ஆண்டு மாணவர்கள் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விவசாயத்தில் பற்றுதல் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் கீதா மார்கரேட் தலைமையில், மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

