ADDED : ஜன 03, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன், அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து மகா சபா மாநில செயல் தலைவர் குருஜி செந்தில்குமார், நகராட்சி முன்னாள் தலைவர் சதீஷ்குமார், ஐயப்பன் பஜனை சமாஜ் தலைவர் துளசிதாஸ், ஆர்.எஸ்.எஸ்., மாநில சேவா பொறுப்பாளர் ஆனந்த் உட்பட பலர், சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரக்கோரி கேரளா அரசை வலியுறுத்தியும் பேசினர்.
பின்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐயப்ப பக்தர்கள் கேரள அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.