/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை துவக்கம்
/
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை துவக்கம்
ADDED : டிச 25, 2024 07:55 PM

குன்னுார்; குன்னுார் ஐயப்பன் கோவிலில் நேற்று துவங்கிய மண்டல பூஜை விழாவில், திருவிளக்கு பூஜை மற்றும் படி பூஜை நடந்தது.
குன்னூர் ஐயப்பன் கோவிலில், 58வது ஆண்டு மண்டல பூஜை நேற்று துவங்கியது. கோவில் ஸ்தாபகர் சாமிதாஸ் சங்கர சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழாவில் காலை, 11:30 மணிக்கு மகளிர் குழுவினரின் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், படி பூஜை, ராக்கால பூஜை, ஹரிவராசனம் இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
முக்கிய திருவிழா நாளான இன்று (26ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள், தீர்த்த குடம், அபிஷேக பொருட்களுடன் செண்டை மேளம், சிந்து பாட்டு, சரண கோஷம் முழங்க ஊர்வலமாக ஐயப்பன் கோவிலை வந்தடைகின்றனர். தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மாலை, 3:00 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து, புலி வாகனத்தில், செண்டை மேளம் முழங்க ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது.
இதில் தையம், பூதந்திரா, தாளம் ஏந்தி, பாலக்கோம்பு ஊர்வலம் இடம்பெறுகிறது. ஏற்பாடுகளை குன்னுார் ஐயப்ப பக்த சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.