/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாயை பிரிந்து தவித்த கீரி குட்டி வனத்துறையிடம் ஒப்படைப்பு
/
தாயை பிரிந்து தவித்த கீரி குட்டி வனத்துறையிடம் ஒப்படைப்பு
தாயை பிரிந்து தவித்த கீரி குட்டி வனத்துறையிடம் ஒப்படைப்பு
தாயை பிரிந்து தவித்த கீரி குட்டி வனத்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 26, 2025 07:42 AM

கூடலுார்: கூடலுார் நகரில் தாயை பிரிந்த கீரிப்பிள்ளை குட்டியை, 'ஸ்டுடியோ' உரிமையாளர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கூடலுார் பழைய கோர்டு சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தாயை பிரிந்து தவித்து கொண்டிருந்த கீரிப்பிள்ளை குட்டியை, பூனை ஒன்று துரத்தி வந்தது. அப்பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வரும் சுதாகர் என்பவர், அதனை பார்த்து, பூனையை விரட்டி கீரிப்பிள்ளை பாதுகாப்பாக மீட்டு, அட்டை பெட்டிக்குள் வைத்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனக்காப்பாளர் செல்வகுமார், கீரிப்பிள்ளையை பாதுகாப்பாக மீட்ட சுதாகரை பாராட்டி, அவரிடம் இருந்து கீரிப்பிள்ளையை பெற்று சென்றார். வனத்துறையினர் கூறுகையில், 'தாயைப் பிரிந்து கீரிப்பிள்ளை குட்டி நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அதிகாரிகள் உத்தரவுப்படி பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்படும்' என்றனர்.