பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கடன் திட்டங்கள்: அதிகபட்சம் 20 உறுப்பினர்களுக்கு அனுமதி
பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கடன் திட்டங்கள்: அதிகபட்சம் 20 உறுப்பினர்களுக்கு அனுமதி
UPDATED : ஜூன் 28, 2026 06:01 PM
ADDED : ஜூன் 28, 2026 05:32 PM
ஊட்டி:பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்திய கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர், பிற் படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.
தொழில் செய்வதற்கு அதிகபட்சமாக, ரூ. 25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம், கடன் தொகைக்கு ஏற்ப, 7 மற்றும் 8 சதவீதம். கடனை திரும்ப செலுத்தும் காலம், 3 முதல், 6 ஆண்டுகள் வரை. குழுக்கடன் திட்டத்தில், தனிநபருக்கு, ரூ. 1.25 லட்சமும், ஒரு குழுவுக்கு, ரூ. 25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சம், 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு, ஒரு கறவை மாட்டிற்கு, 60,000 வீதம், இரண்டு கறவை மாடுகள் வாங்க, ரூ. 1.20 லட்சம் கடன் வழங்கப்படும். கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சாதி, வருமானம், பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
