/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் பல்லாங்குழி சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
/
பந்தலுாரில் பல்லாங்குழி சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
பந்தலுாரில் பல்லாங்குழி சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
பந்தலுாரில் பல்லாங்குழி சாலை; கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : அக் 14, 2024 09:06 PM

பந்தலுார் : பந்தலுார் பஜாரில் சாலை பழுதடைந்து குழிகளாக மாறி வருவதால் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பந்தலுார் பஜார் பகுதி, தமிழக, கேரளா இணைப்பு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. தாலுகா தலைநகரான இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள்; பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் வருவது வழக்கம்.
தமிழகம், கேரளா, கர்நாடக -மாநிலங்களுக்கு சென்று வரும் சரக்கு வாகனங்கள்; பஸ்கள் அதிக அளவில் இந்த வழியாக சென்று வருகிறது. ஆனால், சாலை மோசமான நிலையில் பழுதடைந்து குழிகளாக மாறி உள்ளது.
இந்த சாலையில் நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும், நான்கு முறை தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். எனினும் பயனில்லை.
வெயில் அடித்தால் புழுதி பறக்கும் நிலையில், வியாபாரிகள் தண்ணீரை ஊற்றி தங்கள் வியாபாரத்தை மேற்கொள்கின்றனர்.
அதே நேரம் மழை பெய்தால் குழிகளில் தண்ணீர் நிறைந்து பாதசாரிகளை பாதிக்க செய்கிறது. இதுகுறித்து, மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.