/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் சாலையில் வாழை மரகன்று நட்டு நுாதன போராட்டம்
/
பந்தலுார் சாலையில் வாழை மரகன்று நட்டு நுாதன போராட்டம்
பந்தலுார் சாலையில் வாழை மரகன்று நட்டு நுாதன போராட்டம்
பந்தலுார் சாலையில் வாழை மரகன்று நட்டு நுாதன போராட்டம்
ADDED : பிப் 03, 2025 11:17 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண் வயல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து பாலாப்பள்ளி வழியாக பாட்டவயல் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் கடந்தும், சீரமைக்காத நிலையில் வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பகுதியில் இரவு, 7:00 மணிக்கு மேல் யானைகள் தினசரி வந்து செல்லும் நிலையில், வாகனங்கள் வர முடியாததால், வெளியிடங்களுக்கு பணிக்கு சென்று திரும்பும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வீடுகளுக்கு வருவதற்குள் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி வந்த போதும், யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையில், வாழை மரக்கன்றுகளை நடவு செய்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ''இந்த சாலை சீரமைக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

